-
தமிழீழப் போர் 3
மூன்றாம் கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும் கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும் தரைத்தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற ரீதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன.
இறுதியில் யாழ்.குடாநாட்டிற்கான விநியோகத்தை மட்டுப்படுத்தும் அளவில் வட-கிழக்குக் கடற்பிராந்தியத்தில் கடற்புலிகளின் கைமேலோங்கியதாக இருந்தது. இது யாழ். குடாநாட்டில் நிலை கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரை அச்சம் ஊட்டும் வகையில் காணப்பட்டது. இவ் அச்சுறுத்தல் பற்றி இராணுவ ஆய்வாளர்களால் வெளிப்படையாகப் பிரஸ்தாபிக்கவும்பட்டது.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் இராணுவமும் கடற்படையும் முனைப்பாகப் பயன்படுத்தப்பட்டது போன்று விமானப்படையும் முனைப்பாகவே பயன்படுத்தப்பட்டது. ஒரு வகையிற் பார்த்தால் மற்றைய இரு படைப்பிரிவுகளையும் விட விமானப்படைக்கு முதன்மை அளிக்கப்பட்டது என்றே கூறலாம். இக்காலப்பகுதியிலேயே கிபீர் மிக்-27 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் பயன்பாட்டுக்கு வந்ததோடு அவை போர்க்களத்தில் முக்கிய பங்கும் ஏற்றன.
இதேசமயம் விடுதலைப் புலிகளும் விமான எதிர்ப்புச் சாதனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தனர். இதன் காரணமாக சிறீலங்கா விமானப்படை பல தாக்குதல் வான் கலங்களை இழக்க வேண்டி வந்தது. ஏனைய ஆயுதப் படையினர் போன்றே விமானப் படையும் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் பெரும் இழப்பைச் சந்தித்தது. இவ் விழப்பானது ஒரு கட்டத்தில் விமானப் படையைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது.
இந்த வகையில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப் படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில் இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக யாழ்குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.
இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வொன்று காணப்படும் என்ற ரீதியில் ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி சந்திரிகாவும் அவரது பொ. ஐ. முன்னணியும் விடுதலைப் புலிகளுடனான மோதல் தொடங்கியதும் தமது நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஒன்றைச் செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதே அவர்களின் இந்நிலைப்பாட்டு மாற்றமாகும்.
இதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்குத் தத்துவார்த்த விளக்கம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதுவே 'சமாதானத்துக்கான யுத்தம்' என்ற ஜனாதிபதி சந்திரிகாவின் பிரசித்தமான கோட்பாடாகும். இக்கோட்பாட்டுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முனைப்புப்படுத்திய சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படும் வரை அவர்களுடன் பேச்சு வார்த்தை என்பதற்கு இடமில்லை எனவும் பிரகடனம் செய்தது.
ஆயினும் இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு என்ற தனது நிலைப்பாட்டிற்கு எதிராக எழக்கூடிய உள்நாட்டு வெளிநாட்டு அபிப்பிராயங்களை மழுங்கடிக்கும் வகையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற அறிவிப்பும் அரச தரப்பால் அடிக்கடி வெளியிடப்படும் ஒன்றாக இருந்தது. இந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதி என்ற ரீதியில் 1995 ஆகஸ்டில் அதிகாரப் பரவலாக்கல் திட்டம் ஒன்று அன்றைய நீதி அரசியல் யாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அவர்களினால் ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டது. ஆனால் இவ அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தில் அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட்டதாக இல்லை.
இவ்வாறு கசியவிடப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டமானது பௌத்த அமைப்புக்களினதும் பௌத்த-சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் பேரினவாத ஊடகங்களின் கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியது. பல திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தரப்பும் அவற்றை ஏற்றுக்கொண்டாற்போல் அறிவிப்புக்களை வெளியிட அத்திட்டமானது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் ஆகியது.
அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.
அதன் பின்னர் இத்தீர்வுத்திட்ட யோசனையானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும் பரிசீலனைக்கு விடப்பட்டது. ஆனால் இது முனைப்புப்படுத்தப்பட்ட ஓர் நடவடிக்கையாக இருக்கவில்லை. அரசாங்கம் யுத்தத்திலேயே தீவரப்போக்குக் காட்டியமை காரணமாக இவ விடயமானது இரண்டாம் பட்சமான விடயமாகியது.
இதேசமயம் விடுதலைப் புலிகள் இயக்கமோ இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்தில் உறுதியானதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இந்த வகையில் புலிகளின் நிலைப்பாட்டில் சில அம்சங்கள் முக்கிய இடம்பிடித்தன.
1. இராணுவ ரீதியான அழுத்தங்களுடன் கூடிய நிலையில் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகப் போவதில்லை.
2. சர்வதேசத்தின் மத்தியஸ்த்துவத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளே அரசியல் தீர்வுக்கு வாய்ப்பளிப்பதாக அமையும்.
3. விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் அரசியல் தீர்வொன்றைக் காணவும் எவ வேளையிலும் தயாராகவே உள்ளது.
ஆனால் மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இடைப்பட்ட காலத்திலும் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அரசியல் தீர்வு சர்வதேச மத்தியஸ்துவம் என்பன குறித்துப் பேசியவை யாவும் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்ற நிலையிலேயே சிறீலங்கா ஆட்சியாளர்களினால் விமர்சனம் செய்யப்பட்டன. உலக நாடுகள் சிலவும் இதை மறைமுகமாகவேனும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதான சிறீலங்காவின் முயற்சிகளுக்கு உதவியும் வழங்கி வந்தது.
இதன் காரணமாக அதிகாரப் பரவலாக்கல் திட்டம் என்பதும் அரசியல் தீர்வென்பதும் கிடப்பில் போடப்பட்ட தொன்றாகியிருந்தன. ஆனால் 'ஜயசிக்குறு' 'ரணகோஸ' நடவடிக்கைகள் சந்தித்த பெரும் இழப்புக்களும் தடங்கல்களும் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்துக்கும் அதன் தலைமைக்கும் இனப்பிரச்சினைக்கன அரசியல் தீர்வு பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தோற்றுவித்தன.இதன் விளைவாகவே புலிகளுடன் பேச்சுவார்த்தை வெளிநாட்டு மத்தியஸ்துவம் என்பனவற்றை நிராகரித்து வந்த சந்திரிகா குமாரதுங்க நோர்வே அரசின் மத்தியஸ்துவத்துக்கு அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே சர்வதேச மத்தியஸ்துவத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராக இருந்தமை காரணமாக நோர்வே அரசின் முயற்சி விரைவாகவே ஆரம்பித்தது.
நோர்வேயின் விசேட தூதுவரான எரிக்சொல்கெய்ம் 2000 ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து விடுதலைப் புலிகள் தரப்பினரையும் சிறீலங்கா தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தகளை நடாத்தினார் இதன் பிரகாரம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை எரிக்சொல்கெய்ம் வன்னியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அத்தோடு சமாதான முயற்சிகளுக்கும் தமது பூரண ஒத்துழைப்புகிடைக்கும் எனவும் புலிகளால் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சந்திரிகா குமாரதுங்காவோ அன்றி பொ. ஐ. முன்னணி அரசாங்கமோ இச்சமாதான முயற்சிகளுக்குத் தமது மனப்பூர்வமான சம்மதத்தை வழங்கத் தயாராக இருக்கவில்லை. முதலில் சமாதான முயற்சிகள் தொடர்பாக இழுத்தடிப்பைச் செய்த அவர்கள் இறுதியில் எரிக் சொல்கெய்ம் விடுதலைப் புலிகளின் சார்பாகச் செயற்படுவதாகக் கூறி நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையைத் தோற்றுவித்தனர்.
அதுமாத்திரமல்ல விடுதலைப் புலிகள் சமாதான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் அறிவிப்புச் செய்திருந்த நான்கு மாதகால ஒருதலைப்பட்சமான போர் ஓய்வையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். யாழ்.குடாநாட்டில் சில பகுதிகளை மீள ஆக்கிரமித்துக் கொண்ட அதேவேளை பாரிய படை நடவடிக்கைக்கும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய நிலையில் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் ஒரே குறிக்கோள் விடுதலைப் புலிகளிடம் இழந்துவிட்ட ஆனையிறவுப் பிரதேசத்தை எவ வாறேனும் மீட்டெடுத்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது. இதன் காரணமாக நோர்வேயின் சமரச முயற்சிகள் கூட இரண்டாம் பட்சமானவையாகப் புறம் தள்ளப்பட்டன.
ஆயினும் பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம் முடிவடையும் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தமையால் மீண்டும் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அதிகாரப் பரவலாக்கல் பற்றிப் பேசத் தொடங்கியது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பெறப்பட்ட அதிகாரப் பரவலாக்கற் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு விவாதத்துக்கான நாளை ஒதுக்கீடும் செய்தது. பெரும் சவால்களைக் கொண்டதாக இருந்திருப்பினும் மூன்றாம் கட்ட ஈழப்போரானது தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை உறுதியானதொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
ஆனால் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் முடிவுற்றுப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதினால் இவ வதிகாரப் பரவலாக்கற் திட்டமும் அர்த்தமற்றதாகியது. இதுகூட தேர்தலை இலக்குக் கொண்டே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருப்பினும் அவ வதிகாரப் பரவலாக்கற் திட்டத்தைக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் இனத்துரோகத் தலைமையை உருவாக்கும் சந்திரிகாவின் அரசியல் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. பொ. ஐ. முன்னணி அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எத்தகைய முனைப்புக் காட்டியதோ அதற்கு எந்த வகையிலும் குறையாத அளவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தையும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் சித்தரிக்க முனைந்த சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் இதனையே வெளிவிவகார அமைச்சின் முக்கிய இராஜதந்திரபணி ஆக்கியது.
சந்திரிகா குமாரதுங்காவின் இத்திட்டத்துக்கு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். மேற்கு நாடுகளில் உள்ள சிறீலங்கா தூதுவராலயங்களின் முழுநேரப் பணியாக இப்பிரச்சார நடவடிக்கை அமைந்திருந்தது. லக்ஸ்மன் கதிர்காமரின் பல நாட்கள் இப்பிரச்சாரத்துக்கென வெளிநாடுகளிலேயே கழிந்தன. ஒருவகையிற் பார்த்தால் இம்முயற்சியில் கதிர்காமரும் சந்திரிகா குமாரதுங்கவும் ஓரளவு வெற்றி பெற்றனர் என்றே கூறலாம். அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதன் மூலம் இவ வெற்றி பெறப்பட்டது. இது சந்திரிகா அரசின் மிகப்பெரும் இராஜதந்திர வெற்றியாகவும் சித்தரிக்கப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை சிறீலங்கா அரசின் கோரிக்கை காரணமாகவோ அன்றி அழுத்தத்தின் காரணமாகவோ உருவாகவில்லை என்ற இந்நாடுகளின் அறிவிப்புகள் இவ வெற்றி கூட சிறீலங்காவுக்குரியதல்ல என்பதையே வெளிப்படுத்துவதாயிருந்தது.
ஆயினும் சிறீலங்கா அரசுக்கு இத்தடைகள் தெம்பூட்டுபவையாக இருப்பினும்கூட மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருந த நாடுகள் கூட இனப்பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுதல் வேண்டும் என வலியுறுத்தியமையானது - அரசின் எதிர்பார்க்கைகளுக்கு எல்லையிடுவதாகவே இருந்தது. இந்நிலையிலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அமெரிக்கா மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து தானும் அனுகூலம் அடைவதற்கான நடவடிக்கையில் சிறீலங்கா அரசு இறங்கியது. ஆனால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை என்ற நிலைப பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமோ அன்றி இந்தியாவோ மாற்றிக்கொள்ளாமை விடுதலைப் புலிகள் மீதான தடைமூலம் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் இராஜதந்திர இராணுவ அனுகூலங்களை ஈட்ட முடியாததொரு நிலையையே ஆட்சியாளர்களுக்கு கொடுத்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையைத் தாங்க முடியாத பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்ப ஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது. இரண டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததுபோல் மூன்றாம் கட்ட ஈழப்போரும் அடுத்து நடந்த ஆட்சி மாற்றத்துடன் முடிவுக்கு வந்தது. ஆனால் இரண்டாம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தபோது சிறீலங்கா அரசாங்கம் எதிர்கொண்ட நெருக்கடியைவிட மிக மோசமான அரசியற் பொருளாதார இராணுவ நெருக்கடியை மூன்றாம் ஈழப்போர் முடிவடைந்தபோது எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருபுறம் நாட்டின் பொருளாதாரம் சிதைந்து அதன் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. மறுபுறத்தில் யுத்ததுக்கும் இனப்பிரச்சினைக்கும் உடன் தீர்வு காண வேண்டிய அவசியமும் இருந்தது.
இதனை நன்கு புரிந்துகொண்டிருந்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையில் தெளிவாகக் குறிப்பிட்டார். அவரின் இவ வுரையில் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை குறித்து பின்வரும் அம்சங்கள் வலியுறுத்துப்பட்டன.
1. இனப்பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது.
2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.
3.அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வியைத் தழுவித் தலைகுனிய வேண்டி ஏற்படும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இவ அறிவிப்பானது சந்திரிகா குமாரதுங்கா தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இப்பிரச்சினை தீர்வு குறித்து மேற்கொண்ட இராணுவ - அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் அனைத்தும் தோல்வி கண்டுவிட்டன என்பதைத் தெளிவாக அறிவிப்புச் செய்வதாகவும் இருந்தது. அது மாத்திரமல்ல இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய சர்வதேச நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதையும் வெளிப்படுத்தியது. சமாதானத்திற்கும் அரசியல் தீர்விற்கும் எவ வேளையிலும் நாம் விரோதிகள் அல்ல என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராணுவ ரீதியிலான அடக்கு முறைக்கோ அன்றி அழுத்தத்திற்கோ பணியப்போவதில்லை என்பதையும் வலிறுத்தியே வந்தார்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்திற்கு இத்தகையதொரு பாரிய தோல்வி பின்னடைவு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் கொடுக்கப்பட்டது என்பதே நிதர்சனமானதாகும். இம்மூன்றாம் கட்ட ஈழப்போர் காலத்தில் சந்திரிகா குமாரதுங்கா அரசாங்கம் சிறீலங்கா அரசின் அனைத்து வளங்களையும் சக்தியினையும் பயன்படுத்தி மேற்கொண்ட இராணுவ அரசியல் இராஜதந்திர முயற்சிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் திறம்பட எதிர்கொள்ளப்பட்டு வெற்றி பெறப்பட்டன.
more
-
இலங்கைத் தீவில் நிரந்தரமான சமாதானம்
1994 புரட்டாதி 13ம் நாள் இலண்டன் பி.பி.சியின் தமிழ் சேவையின் சார்பில் திருமதி.ஆனந்தி என்ற நிருபர் தமிழீழத் தேசியத் தலைவரைப் பேட்டி கண்டபோது 'பேச்சுவார்த்தைகள் ஒரு சுமூகமான சூழ்நிலையில், ஒரு சமாதானமான சூழ்நிலையில் நடைபெறுவதையே விரும்புகிறோம். ஒரு சுமூகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு சிறீலங்கா அரசுதான் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாதாரண சிங்கள மக்கள் போரை விரும்பவில்லை. சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்பது எமக்கு நன்கு தெரியும். இந்தத் தேர்தல் முடிவுகளும் அதனையே நிரூபித்துக் காட்டுகின்றன. நாமும் சமாதானத்தையே விரும்புகிறோம். ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம். இன்று சமாதானத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போர்.
எனவே போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். யார் இந்தப் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தார்களோ அவர்களே இந்தப் போருக்கு முடிவுகட்ட முன்வர வேண்டும். போர் மூலம், அடக்கு முறையின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்வதன் மூலமே இன்றைய இனநெருக்கடிக்குத் தீர்வு காணலாம். சமாதான வழிமூலமே இதனைச் சாதிக்கலாம். இதனை சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்கும் இராணுவவாதிகளுக்கும் சிங்கள மக்களே உணர்த்த வேண்டும். நாம் சிங்கள மக்களை நேசிக்கிறோம். நாம் சிங்கள மக்களுக்கு விரோதமானவர்கள் அல்ல. சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாடுகளுக்கும் பகைமைக்கும் இனவாத சக்திகளே காரணம்.
இந்த இனவாத சக்திகளைச் சிங்கள மக்கள் இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இலங்கைத்தீவில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும்" என்று கூறியிருக்கிறார்.
more
-
காந்தரூபன் அறிவுச்சோலை
1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் 'எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள்.
more
-
தமிழீழ நீதித்துறையின் நீதியாளர், சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்
1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் 'போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்" என்றார்.
more
-
தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் 'மனித வளர்ச்சிக்கும் சமூகமேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்கும,; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும். இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது.
தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
more
-
தமிழீழ சட்டக் கல்லூரி
1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது 'தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மை, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும். முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள்.
இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில், பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்" என்றார்.
more
-
புலிகளின் குரல் வானொலிச் சேவை
புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் 'எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்" என்றார்.
more
-
விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்
எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா. இந்த நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக்கழகத்தினரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்கு 1992 ஆடி 15 இல் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அனுப்பிய செய்தியில், 'எமது விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயமாக்கி, மக்கள் போராட்டமாக முழுமைப்படுத்தி மக்கள் அரங்கிலிருந்து ஒரு பலமான உறுதிமிக்க தேசிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டி எழுப்பும் பணி இன்றைய வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் எமது, கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு முக்கியமானது" என்று குறிப்பிட்டிருந்தார்.
more
-
தமிழீழ காவற்துறை
1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக்காவற்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது 'தமிழீழக் காவற்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள்.
பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களொடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்பந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவற்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்" என்றார்.
குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
more
-
செஞ்சோலை சிறுவர் இல்லம்
யுத்த சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் 'வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்" என்றார்.
more
-
தமிழீழ படைத்துறைப் பள்ளி
1991 புரட்டாதி 19ம் நாள் உருவாக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், 'தமிழீழப் படைத்துறைப் பள்ளி எனது
more
-
பங்குனி 8 பெண்கள் தினம்
அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8, 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில், 'பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம். எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்" என்றார்.
more
-
கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள்
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில், 'கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராத, எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது. கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள்.
more
-
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
வைகாசி 6, 1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன், 'தமிழீழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம்@ தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது. இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்று, விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்" என்றார்.
more
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

1985 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தேவைபற்றி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் போது 'தமிழீழ மக்கள் இரு போர் முனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மண்மீட்கும் போர்முனை, மற்றையது சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகள் என்னும் அடக்கு முறையை எதிர்த்து உற்பத்திப் போர்முனை. இதயம் எவ்வாறு குருதிச் சுற்றோட்டத்தை ஒழுங்கு படுத்தி நோய்களையும் பாதிப்புக்களையும் வென்றிட உடலுக்கு உதவுகின்றதோ அவ்வாறே தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழம் எங்கும் உழைப்பைக் குருதியாய் ஓட வைத்து தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அத்திவாரமாக திகழ வேண்டும்" என்றார்.
இவ் அமைப்பின் வளர்ச்சியால் இன்று தமிழீழத்தில் பல குடும்பங்கள் நிவாரணத்தை நம்பி வாழாமல் தாமாகச் சுயதொழில் மூலம் வாழும் நிலையைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
more
-
கடற்புலிகள்
எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது. 1984ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள்
more
-
விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு
ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலை முறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை.
more
-
தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு
1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள்
more
-
தமிழீழப் போர் 2
சிங்களக் காவல்துறையினரின், ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர். ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில்
more
-
சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை
1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார்.
more
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


